இந்தியாவில் ’போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானத்தை இயக்க புதிய விதிமுறைகள்!

இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ் மற்றம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தை பயன்படுத்தி வருகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்தியாவில் ’போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானத்தை இயக்க புதிய விதிமுறைகள்!

டி.ஜி.சி.ஏ மற்றும் இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விதிமுறைகளை மீளாய்வு செய்வதாக கூறியுள்ளன.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, புதிய விதிமுறைகள் அமலாகியுள்ளன.
  2. இந்த மாடல் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என ஆய்வுகள் கூறுகிறது.
  3. ஞாயிறன்று நடந்த விமான விபத்தில் 157 உயிரிழந்தனர்.

எத்தியோப்பியாவில் 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானம் விபத்துக்குள்ளான ஒரு நாளில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை (DGCA) நாட்டில் செயல்படும் விபத்துக்குள்ளான வகை விமானங்களுக்கு கூடுதல் பராமரிப்பு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8' விமானம், நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது. எனவே, ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அதன்படி விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு குறைந்தது '1,000 மணி நேரம்' அனுபவம் வேண்டும் துணை விமானிக்கு 500 மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. 

ruh8a3b4

இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ் மற்றம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தை பயன்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் என்டிடிவியிடம் கூறும்போது, ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரகத்தை சேர்ந்த 13 விமானங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளதாகவும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 5 விமானங்களை கொண்டுள்ளதாகவும் எதுவும் தற்போது இயக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்தஅதிகாரி ஒருவர் கூறும்போது, ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவமனமானது 225 ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் சில விமானங்கள் டெலிவரி பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 205 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து போயிங் நிறுவனம் கூறும்போது, எத்தியோப்பியா விமான விபத்து குறித்து விசாரணையை துவங்கி உள்ளதாகவும், தொடக்க நிலையில் விசாரணைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானிகளுக்கு எந்த புதிய வழிகாட்டுதல்களை வழங்கவும் அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானம் புதிய மாடலாகும், இது 1967 முதல் இயங்கி வருகிறது என்றும் 2017 வரை 5000 விமானங்களுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளதாகவும், இதுவரை 350 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................