வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்தியர்களை மீட்டுவர 25 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கம்

ராஸ் அல் கைமா, ஜெத்தா, ரியாத், தம்மாம் ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் 6 விமானங்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் கோவா, அகமதாபாத், ஜெய்ப்பூரை சேர்ந்த சுமார் ஆயிரம்பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்தியர்களை மீட்டுவர 25 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கம்

மாதக் கணக்கில் பொருளாதாரம் முடங்கியதால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • 25 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 4,500 இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்படவுள்ளனர்.
  • வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர்
New Delhi:

கொரோனாவால் வெளிநாடுகளில் வேலையின்றி தவித்து வரும் இந்தியர்களை மீட்க, 25 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகள் குறிப்பாக செல்வம் கொழிக்கும் நாடுகளில் பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாதக் கணக்கில் பொருளாதாரம் முடங்கியதால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர்.

வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இந்த சூழலில் இந்தியா வர விரும்பும் அவர்களை மீட்பதற்காக வந்தே பாரத் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணியில் தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 25 விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சவூதி அரேபியா, ஓடன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 4,500 இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்படவுள்ளனர்.

ராஸ் அல் கைமா, ஜெத்தா, ரியாத், தம்மாம் ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் 6 விமானங்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் கோவா, அகமதாபாத், ஜெய்ப்பூரை சேர்ந்த சுமார் ஆயிரம்பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதிதாக ராஸ் அல் கைமா, ஜெத்தா, தம்மாம், ரியாத்,மஸ்கட் ஆகிய நகரங்களில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், லக்னோ, கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய நகரங்களுககு  19 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)