This Article is From Jun 28, 2019

''அதிமுகவை பாஜக இயக்கிக் கொண்டிருக்கிறது'' : தங்க தமிழ்ச்செல்வன்!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இன்று இணைந்தார்.

''அதிமுகவை பாஜக இயக்கிக் கொண்டிருக்கிறது'' : தங்க தமிழ்ச்செல்வன்!

ஒற்றைத் தலைமையால் மட்டுமே கட்சி வெற்றி பெற முடியும் என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

அதிமுகவை பாஜக இயக்கிக் கொண்டிருப்பதாக திமுகவில் இணைந்திருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார். 

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இன்று இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது-

ஒற்றைத் தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும். அவ்வாறு செயல்பட்டதால்தான் மக்களவை தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. 

அக்கட்சி நிர்வாகிகளால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிமுகவை பாஜக இயக்கிக் கொண்டிருக்கிறது. தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேரமாட்டேன். பதவியை கேட்டுப் பெறக் கூடாது. 

ஒருவரது உழைப்பை பார்த்து தலைமை பதவி அளிக்க வேண்டும். கேட்டு பதவி பெற்று, உழைப்பது என்பது மரியாதை அல்ல. எனது உழைப்பை பார்த்து திமுக பதவி அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். 

.