This Article is From Aug 10, 2019

கவின், உங்க டெடிக்கேஷன் வேற லெவல்!

ஒருவேளை, இந்த வாரம் சாக்க்ஷி காப்பாற்றப்பட்டால், அடுத்த வார நாமினேஷனில் சாக்க்ஷியை நாமினேட் செய்ய முடியாது.

கவின், உங்க டெடிக்கேஷன் வேற லெவல்!

Kavin, Bigg Boss Tamil Seson 3: இந்த டாஸ்க்கின் ஆல்ரவுன்டராக கவின் திகழ்ந்தார்.

Bigg Boss Tamil Season 3, Day 46: பிக் பாஸ் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கின் முதல் பாதி நேற்றைய நாளில் முடிந்ததை அடுத்து, அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள் இன்று நடைபெற்றன.

முதல் பகுதியில் தனி நபர் திறனை சோதித்த பிக் பாஸ் 'தன் கையே தனக்குதவி' என்ற டாஸ்க்கை (Bigg Boss Task) அறிவித்து, "டாஸ்க் பஸர் அடித்ததும், வீட்டின் கார்டன் ஏரியாவில் 20, 50, 100 என புள்ளிகள் குறிப்பிடப்பட்ட காயின்கள் தூக்கி எறியப்படும். அனைவரும் அந்த டாஸ்க்கில் பங்கேற்று அங்கு எறியப்படும் காயின்களைப் பிடிக்க வேண்டும். டாஸ்க்கின் முடிவில் யார் அதிக புள்ளிகளை வைத்திருக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள்" என்று தெரிவித்தார். மேலும், அவர்களை அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் நாமினேட் செய்ய முடியாது. டாஸ்க் முடிவில் 1,060 புள்ளிகளுடன் சாண்டி முதலிடம், 890 புள்ளிகளுடன் சரவணன் இரண்டாவது, 810 புள்ளிகளுடன் தர்ஷன் முன்றாவது இடம் என்பதும் அறிவிக்கப்பட்டது. 

மேலும் பிக் பாஸ் தொடர்பான கட்டுரைகள்:

'அந்த பசங்க கமலையே விட்டு வைக்கலங்க!'- மாஸ் காட்டும் 'கவின்-சாண்டி' பாய்ஸ் பேண்ட்

வைல்ட் கார்டு என்ட்ரி - முதல் நாளிலேயே ஆதிக்கம் செலுத்தும் 'கஸ்தூரி'!

கவின் பெயர்ல 'வின்', மனசுல 'லாஸ்' - வில்லுப் பாட்டு பாடும் கஸ்தூரி!​

இந்த டாஸ்க்கின் இரண்டாவது பகுதியில், குழு செயல்பாட்டை சோதிக்கும் வகையில் டாஸ்க்கை அளித்தார் பிக் பாஸ். வீட்டிலிருந்த 10 பேர், இருவர் இருவராக ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர். லாஸ்லியா (Losliya) - சாக்க்ஷி (Sakshi), கவின் (Kavin) - சேரன் (Cheran), தர்ஷன் (Darshan) - சாண்டி (Sandy), முகேன் (Mugen) - செரின் (Sherin) மற்றும் மதுமிதா (Madhumitha) - அபிராமி (Abirami). மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த டாஸ்க்கில், அனைவருக்கும் வெல்க்ரோ ஜாக்கெட் கொடுக்கப்பட்டது. மற்றும் அதில் ஒட்டும் வகையில் ஒரு கில்லர் காய்ன் வழங்கப்பட்டது. மூன்று சுற்றுகளின் முடிவில் யார்மீது அந்த காயின் இருக்கிறதோ அந்த அணியில் உள்ளவர்களின் புள்ளிகள் 50 சதவிகிதம், அதாவது பாதியாக குறைக்கப்படும்.

63j6217

மூன்று சுற்றுகளின் முடிவில் கில்லர் காயின் சேரனிடம் இருந்ததால், கவின் - சேரன் என இருவருக்கும் அவர்களின் புள்ளிகளில் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இந்த சுற்றில் கவினுடைய அணி தொல்வியடைந்திருந்தாலும், இந்த டாஸ்க்கின் ஆல்ரவுண்டராக கவின் திகழ்ந்தார். அதுவும் அந்த நீச்சல் குளத்தைத் தாண்டிய அவருடைய ஜம்ப், மக்களிடையே வெகுவான பாராட்டுகளையும் பெற்றது.

இந்த டாஸ்க்கின் 3வது பகுதிதான் அனைத்தையும் தலைகீழாக மாற்றியது. தங்கள் லக்கை சோதிக்கும் விதமாக இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. தண்ணீர் நிரப்பிய ஒரு கண்ணாடித் தொட்டிக்குள், குறிப்புகளுடன் காயின்கள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் ஒரு காயினை எடுத்து அதில் உள்ளதை படித்து அது யாருக்கானது என்பதை சொல்லிவிட்டு செல்ல வேண்டும்.

முன்னதாக இந்த டாஸ்கின் துவக்கத்தில் முதல் மூன்று இடங்களில் சாண்டி, தர்ஷன் மற்றும் மதுமிதா ஆகியோர் இருந்தனர். இந்த டாஸ்க்கின் முடிவில் அனைத்தும் தலைகீழாக, முதலிடத்தில் சாக்க்ஷி, இரண்டாவது இடத்தில் அபிராமி, மூன்றாவது இடத்தில் மதுமிதா என மாறியது.

3hv8jpm

ஒருவேளை, இந்த வாரம் சாக்க்ஷி காப்பாற்றப்பட்டால், அடுத்த வார நாமினேஷனில் சாக்க்ஷியை நாமினேட் செய்ய முடியாது என்பதை பிக் பாஸ் அறிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்னதாக, பிக் பாஸ் வீட்டின் ஆண்கள் அங்குள்ள எதோ ஒரு பெண்ணாக மாறி அவர்களைப் போலவே நடந்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. தற்போது அது ரிவெர்ஸ் செய்யப்பட்டு பெண்கள் ஆண்களாக நடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். மதுமிதா சேரனாகவும், சாக்க்ஷி சாண்டியாகவும், செரின் கவினாகவும் மாறி நடித்தனர். அதே நேரம், தர்ஷனாக லாஸ்லியாவும், முகேனான அபிராமியும் பங்கேற்றனர். இதன் முடிவில், மதுமிதா சிறப்பாக செயல்பட்டதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

tt09v77

இப்படியாக இருக்க, இன்றைய பிக் பாஸ் ப்ரோமோக்கள் வீட்டிற்குள் ஒரு புது முகத்தைக் காட்டுகிறது. வீட்டிற்குள் புதிய வரவாக கஸ்தூரி (Kasthuri) நுழைந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இவர் யாருடைய இடத்தை நிரப்பப்போகிறார். அறிவுரை வழங்கும் சரவணன் (Saravanan) இடத்தையா அல்லது பிரச்னைகளின் துவக்கத்தில் நிற்கும் மிராவின் (Meera Mitun) இடத்திலா?

.