'இந்தா இருக்குடா கிப்ட்டு'- பிக் பாஸ் வீட்டிற்குள் என்டரான கஸ்தூரி!

Bigg Boss 3 Wildcard Entry: வைல்ட்- கார்டு என்ட்ரியில், பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக் நுழைந்தார் நடிகை கஸ்தூரி.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'இந்தா இருக்குடா கிப்ட்டு'- பிக் பாஸ் வீட்டிற்குள் என்டரான கஸ்தூரி!

Kasthuri, Bigg Boss Seson 3 Tamil: புதிய போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்த கஸ்தூரி


Bigg Boss New Entry: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 45 நாட்கள் ஆகிறது. துவங்கியதிலிருந்து இந்த நிகழ்ச்சி, யாராவது ஒருவரால், ஏதாவது ஒரு பிரச்னையால் பரப்பாகவே இருக்கிறது. 16 பேருடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 10 பேரில் நிற்கிறது. பாத்திமா, வனிதா, மோகன் வைத்தியா, மீரா, ரேஷ்மா ஆகியோரது எளிமினேஷன், பெரும் சர்ச்சையில்  முன் அறிவிப்பின்றி சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இன்னிலையில் மக்கள் பிக் பாஸிடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கும் இரண்டு விஷயங்கள், வைல்ட்- கார்டு என்ட்ரி, சீக்ரெட் ரூம். 

இந்த எதிர்பார்ப்பு இரண்டு வாரங்களுக்கு மேலாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அதை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வைல்ட்- கார்டு என்ட்ரியை உள்ளே அனுப்பியுள்ளார் பிக் பாஸ். இவர்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் அடுத்த போட்டியாளர் என்று பலரும் எதிர்பார்த்த கஸ்தூரிதான் இந்த புதிய வைல்ட்- கார்டு என்ட்ரி.

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 3 ப்ரோமோக்கள் வெளியாகும். அதில் வெளியான இன்றைய முதல் ப்ரோமோவில்தான் (Bigg Boss Promo) இதனை உறுதி செய்திருந்தார் பிக் பாஸ். 

இன்று வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு கிப்ட் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதை முதலில் பார்த்து 'இந்தா இருக்குடா கிப்ட்டு' என்று லாஸ்லியா குறல் கொடுக்க, அனைவரும் அந்த பெட்டியை சுற்றி வட்டமிடுகின்றனர் பிக் பாஸ் வீட்டு மக்கள். அப்போது அதிலிருந்து வெளியே வருகிறார் கஸ்தூரி (Kasthuri).

ஒன்ன பூர்த்தி பண்ணீட்டீங்க, இன்னொனு?

கடந்த இரண்டு வாரங்களாக "சீக்ரெட் ரூம் இருக்கு ஆனா இல்லை" என எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் சொல்லிகொண்டிருக்கிறார் கமல். டபிள் ட்ரீட்டாக இந்த வாரம் சீக்ரெட் ரூமை எதிர்பார்க்கலாமா?சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................