2 வாழைப்பழத்திற்கு ரூ. 442 பில் கட்டிய பிரபல நடிகர்!!

பிரபல நடிகர் ராகுல் போஸ் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இந்தியில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார்.

2 வாழைப்பழத்திற்கு ரூ. 442 பில் கட்டிய பிரபல நடிகர்!!

2 வாழைப்பழத்திற்கு கட்டிய பில் குறித்து சமூக வலைதளத்தில் குமுறியுள்ளார் ராகுல் போஸ்

2 வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டதற்காக பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ் ரூ. 442 பில் கட்டியுள்ளார். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்துள்ளது.

இதுதெதாடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு நடிகர் ராகுல் போஸ் குமுறியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஓட்டலில் புகாரும் அளித்திருக்கிறார்

ட்விட்டரில் அவர், 'நீங்கள் இதனை நம்பித்தான் ஆக வேண்டும். பழங்கள் அதிக செலவு பிடிக்காது என்று சொன்னது யார்?' என்று கூறியுள்ளார். அத்துடன் அந்த வீடியோவில் தான் கட்டிய ஓட்டல் பில்லையும் போஸ் காண்பித்துள்ளார். 

அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். தங்கத்தால் பூசப்பட்ட வாழைப்பழங்களை தந்திருப்பார்கள் என்றும், பகல் கொள்ளை நடந்துள்ளது என்றும் ராகுலின் பதிவுக்கு கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.