ஆர்ட் கேலரியில் வைக்கப்பட்ட வாழைப்பழம் -85 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம்

இந்த பழம் தனித்துவமான சிற்பமாகவோ அல்லது ஏதேனும் மெட்டலிலோ செய்தது அல்ல. மாறாக இது மியாமி உள்ள கடையில் வாங்கப்பட்டு ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழம் மட்டுமே.

ஆர்ட் கேலரியில் வைக்கப்பட்ட வாழைப்பழம் -85 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம்

இந்த வாழைப்பழத்திற்கு ‘காமெடியன்’ என்று பெயரிட்டுள்ளார்

மியாமி கடற்கரையில் உள்ள ஆர்ட் பாசலில் ஒரு வாழைப்பழத்தை சுவரில் டேப்பை வைத்து ஒட்டி கலைப்பொருளாக 1,20,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

வாய்ப்பே இல்ல -அதையெல்லாம் யார் வாங்குவா…? என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் பலரும் தங்களின் வங்கி கணக்கில் அப்படி ஒரு தொகை இருக்கக்கூடாதா… என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒற்றை வாழைப்பழத்திற்கு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 85,000,00 வரை கொடுத்து வாங்கியுள்ளனர். 

இந்த வாழைப்பழத்திற்கு ‘காமெடியன்' என்று பெயரிட்டுள்ளார் இத்தாலிய கலைஞரான மஷுர்ஷிய கட்டெலன். இந்த பழம் தனித்துவமான சிற்பமாகவோ அல்லது ஏதேனும் மெட்டலிலோ செய்தது அல்ல. மாறாக இது மியாமி உள்ள கடையில் வாங்கப்பட்டு ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழம் மட்டுமே.

இணையத்தில் இது குறித்து பலவிதமான கருத்துகள் எழுந்துள்ளன. சிலர் நகைச்சுவையாக எண்ணி கமெண்ட் செய்கிறார்கள் சிலர் பணத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

Click for more trending news


More News