This Article is From Feb 25, 2019

தேசிய போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய மோடி, காங்கிரஸை கடுமையாக சாடினார்.

New Delhi:

டெல்லி இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் நம் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்காகவும், புல்வாமா வீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துகிறேன்.

கடந்த பல வருடங்களாக தேசிய போர் நினைவகத்துக்கான கோரிக்கை வலுத்து வந்தது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நினைவகத்தை ஏற்படுத்த இருமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அவை யாவும் நிறைவேறவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கி தற்போதைய அரசு உங்கள் அனைவரின் ஆசியுடனும் தேசிய போர் நினைவகத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் புதுப்பொலிவுடன் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டது. இங்கு, அமர்ஜவான் ஜோதி என்ற பெயரில் 1971-ம் ஆண்டு முதல் அணையா ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது. இதை விரிவுபடுத்தி, பிரமாண்ட அளவில் போர் நினைவுச் சின்னம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


 

.