
பேரிடர் காலங்களில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிஎம் கேர் தொடங்கப்பட்டது
பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் PM Cares நிதித்திட்டத்திற்கு வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேரிடர் காலங்களில் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த மார்ச் மாதம் PM Cares என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, இதில் யார் வேண்டுமானாலும் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் 5 நாட்களில் 3,076 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் கூறுகையில், பெண் குழந்தைகள் கல்வி முதல் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் வரையில் பிரதமர் மோடி நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிஎம் கேரின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்த திட்டத்தில் நிதி வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளின் பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பினர்