This Article is From Sep 03, 2020

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா!

இந்தியா முழுவதும் சுமார் 83 ஆயிரம் பேருக்கு புதிதாகக் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா!
New Delhi:

 இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24 மணி நேரத்தில் 1,043 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,53,406 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநிலத்தில் 17,433 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு இதுவரையில் மொத்தம் 8,25,739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், மும்பையில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

இதனையடுத்து ஆந்திராவில் 10,368 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,139 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதிதாக 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது. 

கர்நாடகாவில் ஒரே நாளில் கொரோனாவால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 9,800 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால், மொத்த பாதிப்புகள் 3,61,341 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில்  கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகநாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனாவால் மிகக்குறைந்த உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. உலகளவில் சராசரியாக 10 லட்சம் பேரில் 110 பேர் கொரோனாவால் உயிரிழந்து வரும் நிலையில், இந்தியாவில் 48 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 
 

.