This Article is From Aug 02, 2019

“நாங்களும் பாகிஸ்தானுமே பார்த்துக்கிறோம்!”- ட்ரம்புக்கு மீண்டும் ‘நோ’ சொன்ன இந்தியா

Donald Trump on Kashmir Issue: "காஷ்மீர் விவகாரம் வெகு காலமாக நீடித்து வருகிறது. அது விரைவில் தீர்க்கப்பட வேண்டும்”

“நாங்களும் பாகிஸ்தானுமே பார்த்துக்கிறோம்!”- ட்ரம்புக்கு மீண்டும் ‘நோ’ சொன்ன இந்தியா

சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேரில் சென்று சந்தித்தார்

New Delhi:

அமெரிக்க அதிபர் டொலால்டு ட்ரம்ப்(Donald Trump), மீண்டும், “காஷ்மீர் விவகாரத்தில் என்னை மத்தியஸ்தம் செய்ய அவர்கள் அழைப்பு விடுத்தால், அதைச் செய்வேன்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்க தரப்பிடம் இந்தியா, “காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பாகிஸ்தானிடம் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான மைக் போம்பியோவிடம் இது குறித்து தெரிவித்துள்ளதாக ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான மைக் போம்பியோவிடம், காஷ்மீர் குறித்து நாங்கள் பாகிஸ்தானிடம் மட்டும்தான் பேசுவோம் என்றும், இருவர் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தையாகவே அது இருக்கும் என்றும் கூறியிருக்கிறேன்” என்று ஜெய்ஷங்கர் ட்வீட்டியுள்ளார். 

“காஷ்மீர் விவகாரம் குறித்து எப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும். இம்ரான் கான் மற்றும் மோடி ஆகியோர் மிகவும் சிறந்த மனிதர்கள். அவர்கள் இருவராகவே ஒரு விஷயம் குறித்து பேசி முடிவுக்கு வர முடியும். ஆனால், அவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய யாராவது வேண்டும் என்று நினைத்தால் நான் அதைச் செய்ய தயார்.

m37ji6ko

பாகிஸ்தானின் பாலகோட்டில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாமின் மீது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா தாக்குதல் நடத்தியது.

காஷ்மீர் விவகாரம் வெகு காலமாக நீடித்து வருகிறது. அது விரைவில் தீர்க்கப்பட வேண்டும்” என்று அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேரில் சென்று சந்தித்தார். அப்போது ட்ரம்ப், “இரண்டு வாரத்துக்கு முன்னர் பிரதமர் மோடியுடன் நான் பேசிக் கொண்டிருக்கும் போது காஷ்மீர் பிரச்னை குறித்தும் உரையாடினோம். அப்போது அவர், ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்க முடியுமா' என்று கேட்டார்” என்று பரபர கருத்தைத் தெரிவித்தார். பிரதமர் மோடி அப்படி எந்த கோரிக்கையையும் அதிபர் ட்ரம்பிடம் வைக்கவில்லை என்று இந்திய அரசு தரப்பு, அப்போதே விளக்கம் கொடுத்துவிட்டது. 

.