This Article is From Sep 11, 2020

இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இரண்டாவது முறையாக சந்திக்க வாய்ப்பு!

முன்னதாக ஜூன் 14 அன்று கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தினையடுத்து இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இரண்டாவது முறையாக சந்திக்க வாய்ப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது மாஸ்கோவில் உள்ளார்

New Delhi:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை இரண்டாவது முறையாக சந்திக்க உள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது மாஸ்கோவில் உள்ளார். இந்நிலையில் சமீப நாட்களாக எல்லையில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்கள் குறித்து இரண்டாவது முறையாக வாங் யியுடன் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமையன்று சீன வீரர்கள் லடாக்கின் பாங்காங்க் தச்சோ பகுதியில் ஆயுதங்களுடன் இந்திய எல்லையின் நிலைகளை கைப்பற்ற முயன்றதாக சொல்லப்படுகின்றது. இது முன்னர் ஏற்பட்ட மிகப்பெரும் மோதல்களைக் காட்டிலும் சிறியதாக இருந்தாலும், பதட்டத்தினை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜூன் 14 அன்று கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தினையடுத்து இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகின்றது.

சமீபத்தில் நடந்த பிரச்னை குறித்து இந்தியா, “சீன வீரர்கள் ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை பின்வாங்க வற்புறுத்தியுள்ளனர்” என்றும், “அச்சுறுத்தும் விதமாக வானத்தினை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளது. ஆனால், சீனா இந்த குற்றச்சாட்டினை மறுத்து இவ்வாறு செய்தது இந்தியாதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.

ஜெய்சங்கர் முன்னதாக கடந்த வாரத்தில் இது மிக மோசமான பிரச்னை என்றும், இதனை தீர்க்க இரு தரப்பிலும் அரசியல் மட்ட பேச்சு வார்த்தை அவசியம் என்றும் கூறியிருந்தார். நேற்று மத்திய அரசு இந்த பிரச்னை எந்த வடிவம் வேண்டுமானாலும் எடுக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.