This Article is From Jun 04, 2020

கொரோனா தொற்றுக்கு எதிரான ஆய்வில் ஹைட்ராக்சி குளோரோகுயினை மீண்டும் இணைத்துக்கொள்ள WHO அனுமதி!

பொதுவாக மலேரியா தொற்று மற்றும் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை பொது வெளியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் கொரேனாவுக்கு எதிராக இந்த மருந்தினை பயன்படுத்துவதாக அறிவித்திருந்ததையொட்டி பல நாடுகளும் இந்த மருந்தினை வாங்க தொடங்கின.

கொரோனா தொற்றுக்கு எதிரான ஆய்வில் ஹைட்ராக்சி குளோரோகுயினை மீண்டும் இணைத்துக்கொள்ள WHO அனுமதி!

உலக சுகாதார அமைப்பு முன்னர் தற்காலிகமாக மருந்துகளின் சோதனைகளை நிறுத்தியது

ஹைலைட்ஸ்

  • On May 25, the WHO had temporarily suspended the trials
  • Hydroxychloroquine is normally used to treat arthritis
  • A review concluded there are no reasons to modify the trial protocol
Geneva:

 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 63 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனம்(WHO) ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை மீண்டும் கொரோனா தொற்றுக்கு எதிரான பரிசோதனையில் உட்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.  முன்னதாக மே 25 அன்று உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்றுக்கு எதிராக ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை பயன்படுத்துவது குறித்த ஆய்வினை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.

தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை எடுத்துக்கொள்ளும் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து இந்த தடையை WHO அறிவித்திருந்தது.

ஒற்றுமை சோதனை என்று அழைக்கப்படும் உலகளாவிய மருத்துவர்கள் குழுவில் 35 நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும், பரிசோதனைக்காக 3,500க்கும் அதிகமான நோயாளிகளும் தன்னார்வலர்களாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்ற காரணத்தினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த தடை மேற்கொள்ளப்பட்டது என WHO தெரிவித்திருந்தது.

“ஒற்றுமை சோதனை நிர்வாகக்குழு, மருந்துகளின் பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகள் தொடர்பாக, கொரோனா தொற்றுக்கு எதிரான சோதனைகளில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை தற்காலிக இடைநிறுத்தம் செய்கிறது.“ என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.  

பொதுவாக மலேரியா தொற்று மற்றும் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை பொது வெளியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்தினை பயன்படுத்துவதாக அறிவித்திருந்ததையொட்டி பல நாடுகளும் இந்த மருந்தினை வாங்க தொடங்கின.

இந்நிலையில், ஒற்றுமை சோதனை குழுவானது ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவது குறித்த சோதனைகளின் தரவுகளை ஆராய்ந்து வந்தது. இதனை தொடர்ந்து ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை மீண்டும் கொரோனா தொற்றுக்கு எதிரான பரிசோதனையில் உட்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், சோதனையில் சோதிக்கப்படும் அனைத்து சிகிச்சை முறைகளின் பாதுகாப்பையும் ஒற்றுமை சோதனை குழுவானது தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.