This Article is From Jun 03, 2020

இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா: வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, இருநாட்டு தலைவர்களும், ஜி7 மாநாடு, கொரோனா பரவல், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா: வெள்ளை மாளிகை தகவல்

இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா: வெள்ளை மாளிகை தகவல்

Washington DC:

இந்தியாவுக்கு நன்கொடையாக தருவதாக கூறிய வென்டிலேட்டர்களில் முதல் 100 வெண்டிலேட்டர்களை அடுத்த வாரம் அனுப்புவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜி20 மாநாட்டு அழைப்பின் போது பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக வெள்ளை மாளிலை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, இருநாட்டு தலைவர்களும், ஜி7 மாநாடு, கொரோனா பரவல், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர். 

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நன்கொடையாக தருவதாக கூறிய வென்டிலேட்டர்களில் முதலில் 100 வெண்டிலேட்டர்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கும் என்பதை அறிவிப்பதில், டிரம்ப் மகிழ்ச்சியடைந்துள்ளார். 

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், நண்பர் டொனால்ட் டிரம்புடன் அன்பான மற்றும் பயனுள்ள உரையாடலைக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஜி7 உச்சி மாநாடு, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பல பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். 

"இந்தியா-அமெரிக்க ஆலோசனைகளின் செழுமையும் ஆழமும் கொரோனாவுக்கு பிந்தைய உலகளாவிய கட்டமைப்புக்கு ஒரு முக்கிய தூணாக இருக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

ஜி7 உச்சி மாநாட்டில், இந்தியா உள்ளிட்ட பிற முக்கிய நாடுகளையும் சேர்ப்பதற்கும் தற்போதுள்ள உறுப்பினர்களுக்கு அப்பால் குழுவின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜி7 அமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும், அதில் இந்தியாவை இணைப்பது குறித்தும் டிரம்ப் பேசியதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ், இந்தியா சீன எல்லை விவகாரம், மற்றும் உலக சுகாதார நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான தேவை குறித்து விவாதித்ததாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

.