கறுப்பின இளைஞர் உயிரிழந்தது எப்படி? பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானதால் பதற்றம்!

46 வயதான, ஜார்ஜ் சட்ட அமலாக்க அடக்குமுறையாலும், அவரது கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு இதயம் செயழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கறுப்பின இளைஞர் உயிரிழந்தது எப்படி? பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானதால் பதற்றம்!

கறுப்பின இளைஞர் உயிரிழந்தது எப்படி? பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானதால் பதற்றம்!

Minneapolis, United States:

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த அதிகாரப்பூர்வ பிரதே பரிசோதனை அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. அதில், ஜார்ஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸாரின் விசாரணையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்தது. 

இந்நிலையில் மின்னபொலிஸ் உள்ள ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 46 வயதான, ஜார்ஜ் சட்ட அமலாக்க அடக்குமுறையாலும், அவரது கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு இதயம் செயழிந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜார்ஜின் பிற உடல்நிலை குறித்த தகவல்களில், தமனி பெருங்குடல் மற்றும் உயர் இரத்த அழுத்த இதய நோய் உள்ளதாகவும், சமீபத்தில் ஃபெண்டானில்; மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அறிக்கையில் பளாய்டு உயிரிழந்தது, படுகொலையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, பிளாய்டு மரணத்திற்கு நியாயம் கேட்டு மின்னபொலிஸ் மற்றும் அமெரிக்காவை சுற்றியுள்ள நகரங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.