This Article is From Oct 17, 2019

Funny TikTok Video: நடிப்பு நாயகனான நாய்...! பாருங்க சிரிங்க

நாயின் நகத்தை உரிமையாளர் வெட்ட முயல்கிறார். உடனே, நாய் மயங்கி கீழே விழுவது போல் நடிக்கிறது.

Funny TikTok Video: நடிப்பு நாயகனான நாய்...! பாருங்க சிரிங்க

நடிப்பு நாயகன் என்று பலரும் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர்

நாய்களுக்கு நகம் வெட்டுவது என்பது மிகவும் பிடிக்காத விஷயம் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. டிக்டாக் வீடியோ ஒன்றில் நாயின் நகத்தை உரிமையாளர் வெட்ட முயல்கிறார்.  உடனே, நாய் மயங்கி கீழே விழுவது போல் நடிக்கிறது. 

இந்த வீடியோ இணையத்தை வெகுவாக ஆக்ரமித்துள்ளது. மில்லியன் கணக்கானோர் இதை பார்வையிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு டிக்டாக் பயனரான ஆஷின் கோஸ்லா இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோவை 5.8 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 

பலரும் விதவிதமான கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர்.  “நடிப்பு நாயகன்” என்று  பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

Click for more trending news


.