பாட்டு பாடும் நாய்! 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த வைரல் வீடியோ!!

நாய் பாட்டு பாடும் இந்த வீடியோ, ஃபேஸ்புக்கில் சுமார் 1.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது

பாட்டு பாடும் நாய்! 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த வைரல் வீடியோ!!

பாட்டு பாடும் நாய் (கோப்புப் படம்)

நாய் ஒன்று பாட்டு பாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த காமெடியனும் எழுத்தாளருமான ரோஹித் நாயர் தனது நாயோடு சேர்ந்து பாட்டுப் பாடுகிறார். சுமார் 49 நொடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோதான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. 

அந்த வீடியோவில் அவர் பாட்டு பாட ஆரம்பிக்க, அவரது நாயும் அவரோடு சேர்ந்து ஊளையிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. உடனே அவர் பாடுவதை நிறுத்த, நாயும் கத்துவதை நிறுத்தி விடுகிறது. 

இந்த வீடியோவை ரேஹித் தனது சமூகவலைதளங்களில் பதிவிட, அடுத்த சில மணி நேரங்களிலேயே வைரலானது. பலரும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாகவும் இதை வைக்கத் தொடங்கினர். 

நாய் பாட்டு பாடும் இந்த வீடியோ, ஃபேஸ்புக்கில் சுமார் 1.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரியாக்ஷன் இட்டுள்ளனர். இந்த நாய் பாடுவது இது முதல் முறை இல்லை என்றும், ஏற்கனவே இது போல் பாடியுள்ளதாகவும் காமெடியன் ரோஹித் கூறுகிறார்.

Click for more trending news