
தெருநாய்க்கு ஸ்கார்ப் போர்த்தும் பெண்
துருக்கியில் மழை, குளிரில் நடுங்கும் தெருநாய்க்கு பெண் ஒருவர் போர்வை போர்த்திய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் பெண் ஒருவர், குளிரில் நடுங்கும் தெருநாய்க்கு தனது ஸ்கார்ப்பை போர்த்தி விட்டு செல்கிறார். இந்த வீடியோவைப் பதிவிட்ட அவர், கடவுள் உங்களுடைய உடைமைகளைப் பார்ப்பதில்லை, உள்ளத்தைத் தான் பார்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ துருக்கியில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். ஒரு காலை பொழுதில் மழை தூரிக் கொண்டிருக்கிறது. அப்போது சாலையில் மக்களோடு மக்களாக வந்த ஒரு பெண், மழையில் நனையாமல் இருக்க குடையை விரிக்கிறார். அப்போது அவருக்கு அருகில் தெருநாய் ஒன்று பனியில் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
இதனைக் கண்ட அந்த பெண்மணி, குடையை மடித்துவிட்டு, தனது பையில் இருந்து ஒரு தனது ஸ்கார்ப்பை எடுத்தார். அதை அப்படியே தெரு நாய் மீது போர்த்தி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
இந்த வீடியோ கடந்தாண்டு சமூகவலைதளங்களில் சில மணி நேரங்களிலேயே பல ஆயிரக்கானோர்களைச் சென்றடைந்தது. இது தொடர்பாக லேட்பைபிளின் கூற்றுப்படி, அந்தப் பெண்மணியின் பெயர் த்யூகு எல்மா என்பது வெளியுலகத்துக்குத் தெரியவந்தது.
தெருநாய்க்கு ஸ்கார்ப் போர்த்தும் பெண்:
God does not look at your possessions,
— Susanta Nanda (@susantananda3) August 24, 2020
but he looks at your heart & deeds ???????? pic.twitter.com/PQqQ5x05RV
ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா தற்போது அந்த வீடியோவை ரீடுவிட் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுக்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.