This Article is From Aug 10, 2019

லாகூர்-டெல்லி இடையே இயக்கப்படும் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்!

கடந்த 1999-ல் லாகூர்-டெல்லி இடையே நட்பு ரீதியில் இந்த பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பேருந்து சேவை பின்னர் 2003ல் மீண்டும் தொடங்கியது.

லாகூர்-டெல்லி இடையே இயக்கப்படும் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்!

வாரத்தில் 6 நாட்கள் லாகூர்-டெல்லி இடையே நட்பு ரீதியில் பேருந்து சேவை இயங்கி வந்தது.

Islamabad:

லாகூர்-டெல்லி இடையே நட்பு ரீதியாக இயக்கப்படும் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்து அறிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் அரசு பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது. இதேபோல் ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் அனுமதிக்காமல் ரத்து செய்தது.
 

இந்நிலையில், லாகூர்-டெல்லி இடையே நட்பு ரீதியில் இயக்கப்படும் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு கமிட்டி எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த பேருந்து சேவையானது 1999ல் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு பேருந்துசேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், 2003ல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டடது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 
 

.