This Article is From Sep 28, 2018

சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவு பிறப்பித்துள்ளது

சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Sabarimala Temple: Supreme Court Verdict: சட்ட சாசனத்துக்கு எதிரான விதிமுறைகளுக்கு அனுமதி தரப்படாது, உச்ச நீதிமன்றம்

New Delhi:

அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் (Sabarimala Temple) அனுமதிக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

10 முதல் 50 வயதுகுட்ப்பட்ட பெண்கள், சபரிமலையில் இருக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு இருக்கும் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கோயிலில் உள்ள ஐயப்ப சாமி, பிரமச்சாரி என்பதால் இந்த வயது பெண்கள் வரக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. 

இந்நிலைநில் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், 'ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு மட்டும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதியில்லை என்பது இந்து மத கோட்பாடாக பார்க்க முடியாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்கள் விருப்பப்பட்ட மதத்தை பின்பற்றுவதற்கு முழு உரிமையுண்டு. சட்ட சாசனத்துக்கு எதிரான விதிமுறைகளுக்கு அனுமதி தரப்படாது' என்று தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திராசூட், குவாலிகர், இந்திரா மல்கோத்ரா, மற்றும் நாரிமன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். 4 நீதிபதிகள், 'பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்றும் ஒருவர், அதற்கு எதிராகவும் கருத்து தெரிவத்துள்ளார்.

.