அமித் ஷாவை சந்திக்கும் சவுரவ் கங்குலி!! பாஜகவில் இணைகிறாரா?

மத்திய அமைச்சருடனான சந்தப்பில் எந்தவித அரசியலும் இல்லை என அமித்ஷா கூறியுள்ளார்.

அமித் ஷாவை சந்திக்கும் சவுரவ் கங்குலி!! பாஜகவில் இணைகிறாரா?

சவுரவ் கங்குலி மும்பையில் கடந்த ஞாயிறன்று அமித்ஷாவை சந்தித்தார்.

New Delhi:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று கங்குலி சந்திக்க உள்ளார். 

பிசிசஐ தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேலுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், சவுரவ் கங்குலி இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக, மும்பையில் கடந்த ஞாயிறன்று அமித்ஷாவை சந்தித்தார் சவுரவ் கங்குலி. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐயின் புதிய செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இதனிடையே, கங்குலியிடம் பாஜகவில் இணைய உள்ளீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அமைச்சருடனான சந்தப்பில் எந்தவித அரசியலும் இல்லை என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு முறை கூட நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதை செய்கிறோம் என்று அவர் கூறியதில்லை. அதற்கு உங்களுக்கு மதிப்பு கொடுக்க தெரிய வேண்டும்..

இந்த சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், ஏற்கனவே, நான் மம்தாவை சந்தித்த போது, இது போன்ற அரசியல் கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன் என்ற அவர், அதன் முடிவுகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று கூறினார். 

இதுதொடர்பாக இந்தியா டூடேக்கு அமித் ஷா அளித்த பேட்டியில், இதேபோன்ற ஒரு பதிலை அளித்திருந்தார். கங்குலியுடன் அப்படி எந்த ஒப்பந்தமோ அல்லது பேச்சுவார்த்தைகளோ இல்லை என்ற அவர், இது கங்குலிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி என்று அமித்ஷா கூறினார். 

Newsbeep

மேற்குவங்கத்தில் வரும் 2021ல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், அமித் ஷாவுடனான கங்குலியின் சந்திப்பு முக்கயித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மேற்குவங்கத்தில், பாஜக மொத்தமுள்ள 42 தொகுதிகளில், 18 தொகுதிகளை கைப்பற்றியது. இதேபோல, சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி உள்ளது. 

மேலும், கங்குலியை பிசிசிஐ தலைவராக தேர்வு செய்து மேற்குவங்க மக்களின் செல்வாக்கை பெறுவதற்காகவே அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது. 

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயர் முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. எனினும், பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்படுவார் என தெரிகிறது. 

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐயின் புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. துமால், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் ஆவார்.