This Article is From Jul 12, 2019

232 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதை மருந்தை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை - பரபரப்பான வீடியோ

இந்த சம்பவத்தில் 17,000 பவுண்ட் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 232 மில்லியன் டாலர் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

232 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதை மருந்தை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை - பரபரப்பான வீடியோ

ஜுன் 18 இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது

அமெரிக்காவிற்குள் கடல்வழியாகவே அதிகம் போதை மருந்துகள் வருவது அதிகரித்துள்ளது. இதற்காக அமெரிக்க அரசு போதை மருந்தை தடுப்புக்கான அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கடல் எல்லையில் போதை மருந்து தடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பலவகையிலும் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. 

அமெரிக்கவிற்குள் 80 சதவீத போதை மருந்துகள் கடல்வழியாகவே வருகிறது. அதில் 11% சதவீதம் நீர்மூழ்கி கப்பல் மூலமாக கைப்பற்றியுள்ளனர். கடந்த சில மாதங்களாக அமெரிக்க கடற்படையினர் தொடர்ந்து சோதனை பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் கடந்த மாதம் கடற்படை விமானம் சட்டவிரோதமாகப் பயணிக்கும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கண்டது. உடனடியாக அமெரிக்க கடற்படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அவர்களும் சிறிய படகுகளில் சென்று   நீர்மூழ்கிக் கப்பலை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவம் ஹெல்மெட் கேமராவில் பதிவாகியுள்ளது. அதிவிரைவாக செல்லும் நீர் மூழ்கி கப்பலை நிறுத்தும் படி உத்தரவிடுகின்றனர். ஆனால், அது வேகமாகச் செல்கிறது. கடற்படை வீரர்கள் அந்த நீர்மூழ்கி கப்பலின் மீது குதித்து அதன் கதவை திறக்கிறார். உள்ளிருந்த நபர் உடனடியாக சரணடைவதாக கூறுகிறார்கள்.  அதோடு அந்தக் காணொலி காட்சி முடிகிறது.  இந்த சம்பவத்தில் 17,000 பவுண்ட் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 232 மில்லியன் டாலர் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.