বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 23, 2019

டிவி ஆண்டனாவில் தொங்கியவாறு காகத்தை ருசிபார்த்த பாம்பு!! #ViralVideo

வைரலாகி வரும் வீடியோவில் பாம்பு ஒன்று ஆன்டனாவில் தொங்கியவாறு காகம்போன்ற பறவையை சாப்பிடுகிறது.

Advertisement
விசித்திரம் Edited by

பறவையை பாம்பு உண்ணும் காட்சி

ஆஸ்திரேலியாவில் பாம்பு ஒன்று ஆன்டனாவில் தொங்கியவாறு காகத்தை ருசிபார்த்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கிங்ஸ் கிளிப் பகுதியை சேர்ந்த கேத்தி கல் என்பவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இந்த காட்சியை கண்டதும், அதனை வீடியோவாக எடுத்துக் கொண்டார்.

இதன் பின்னர் கேத்தி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட, அதனை ஏராளமானோர் ஷேர் செய்து வைரலாக்கினர். இதுகுறித்து ஏபிசி நியூஸ் நிறுவனத்திற்கு கேத்தி அளித்த பேட்டியில், ‘'பறவையை பாம்பு சாப்பிடுவதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் ஓடிசி சென்று வீடியோ எடுக்கத் தொடங்கினேன்'' என்றார்.

 
 

பேஸ்புக்கில் பதிவிட்ட கேத்தி, ‘'இதுபோன்ற காட்சியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டீர்கள்… எங்கள் வீட்டு ஆன்டனாவில் தொங்கிக் கொண்டு பறவையை பாம்பு ருசி பார்க்கிறது'' என்று வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்து அதற்கு கமென்ட் அடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பர்மாவில் பாம்பு ஒன்று தன்னை விட பெரிய மானை சாப்பிட்ட காட்சி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 

Advertisement