‘மின்னல்’ வேகத்தில் வந்த சிங்கம்; சிதறி ஓடிய மக்கள்; 'பகீர்' கிளப்பும் வைரல் வீடியோ!!

Viral Video: அந்த வீடியோவில், மக்கள் கும்பலாக ஒரு இடத்தில் நிற்கிறார்கள். தூரத்தில் எதோ வருவதைப் பார்க்கிறார்கள்.

‘மின்னல்’ வேகத்தில் வந்த சிங்கம்; சிதறி ஓடிய மக்கள்; 'பகீர்' கிளப்பும் வைரல் வீடியோ!!

Viral Video: சில கணத்தில் அது சிங்கம் என்று தெரிகிறது. அவ்வளவுதான்…

ஹைலைட்ஸ்

  • இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது
  • வீடியோவில் சிங்கம் வேகமாக மக்களைவிட்டு ஓடிவிடுகிறது
  • இந்திய வனத் துறை அதிகாரி ஒருவரால் வீடியோ பகிரப்பட்டுள்ளது
New Delhi:

குஜராத் மாநில மாதவ்பூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு சிங்கம் மின்னல் வேகத்தில் மக்கள் இருக்கும் இடத்தில் ஓடி வருகிறது. 

இந்திய வனத் துறை அதிகாரி, சுசாந்தா நந்தாவால் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவுடன் அவர், “80 கிலோ மீட்டர் வேகத்தில் உங்களை நோக்கி ஒருவர் ஓடி வருகிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்… உசைன் போல்டாக இருந்தால் கூட, படுவேகத்தில் ஓடி வரும் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியாது அல்லவா. அப்படிப்பட்ட நேரத்தில் எப்படி சகிப்புத்தன்மை இருக்கும். இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம். குஜராத்தின் மாதவ்பூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது” என்று எழுதிப் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், மக்கள் கும்பலாக ஒரு இடத்தில் நிற்கிறார்கள். தூரத்தில் எதோ வருவதைப் பார்க்கிறார்கள். சில கணத்தில் அது சிங்கம் என்று தெரிகிறது. அவ்வளவுதான்… அலறியடித்துக் கொண்டு எல்லோரும் ஓடி ஒலிக்கிறார்கள். சிங்கம், நேராக அந்த இடத்தைவிட்டு வேகமாகப் பாய்ந்து ஓடுகிறது. 

இந்த வீடியோ வைரலானதிலிருந்து பலரும் அச்சத்துடன் கருத்திட்டு வருகின்றனர். ஒரு ட்விட்டர் பயனர், “இந்த சிங்கத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என நம்புகிறேன்,” என்கிறார்.

இன்னொருவரோ, “ஒரு நாய் ஓடுவதைப் போல இந்த சிங்கம் ஓடுகிறது. அது பத்திரமாக இருப்பதாக நம்புகிறேன்,” என்கிறார்.

Listen to the latest songs, only on JioSaavn.com