ராஜநாகத்தை கூலாக குளிப்பாட்டி விடும் நபர்… கிரங்கடிக்கும் வீடியோ!

நேஷனல் ஜியோகிராஃபிக் அளிக்கும் தகவல்படி, உலகிலேயே மிகக் கொடிய விஷமுடைய பாம்பு ராஜ நாகம்தான் என்கிறது.

ராஜநாகத்தை கூலாக குளிப்பாட்டி விடும் நபர்… கிரங்கடிக்கும் வீடியோ!

மேலும், ராஜநாகம் ஓர் ஆளுயுரத்திற்கு படமெடுத்து தாக்குதலில் ஈடுபடும் வல்லமைக் கொண்டது எனவும் சொல்லப்படுகிறது

பாம்பைக் கண்டால் என்ன… பாம்பைப் பற்றி நினைத்தாலே பலருக்கு கதிகலங்கும். ஆனால், ஒரு நபர் நாகப் பாம்பிற்கு, அதுவும் ராஜநாகப் பாம்பிடம் சர்வ சாதாரணமாக பழகுகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? 

ட்விட்டர் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் மிக கேஷ்வலாக பல அடி நீளமுள்ள ராஜநாகத்தை, வாலியிலிருந்து நீர் ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார். சுமார் 51 நொடிகள் ஓடும் இந்த வீடியோவை இந்திய வனத் துறை அதிகாரி, சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

வீடியோவில், ஒரு நபர், 6 அடிக்கு மேல் நீளமுள்ள ராஜநாகத்தின் மீது வாலியிலிருந்து தண்ணீரை ஊற்றுகிறார். அந்த பாம்பும் எந்தவித சீற்றத்தையும் வெளிக்காட்டாமல் அப்படியே படமெடுத்து நிற்கிறது. பின்னர், பக்கெட்டை கீழே வைத்துவிட்டுப் பாம்பைக் கொஞ்சுகிறார் அந்த நபர். பிறகு மீண்டும் இன்னொரு வாலி தண்ணீர் பிடித்து அதன் மீது ஊற்றுகிறார். இந்த மொத்த சம்பவத்தின்போதும் ஒரு பசுவைப் போல அமைதியாக இருக்கிறது ராஜநாகம். 

வீடியோவுடன் அதிகாரி நந்தா, “வெயில் காலம்… யாருக்குத்தான் குளிக்கப் பிடிக்காது.

தயவு செய்து இதை முயற்சிக்காதீர்கள். மிக ஆபத்தானது!” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வீடியோவைப் பார்க்க:

பகிரப்பட்ட சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது இந்த வீடியோ. பலரும் ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகின்றனர். 

மேலும் சிலர், வீடியோவில் வரும் நபர், காட்டுயிர் பாதுகாவலரும் பாம்பு நிபுணருமான வவா சுரேஷ் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். 

 

நேஷனல் ஜியோகிராஃபிக் அளிக்கும் தகவல்படி, உலகிலேயே மிகக் கொடிய விஷமுடைய பாம்பு ராஜ நாகம்தான் என்கிறது. மேலும், ராஜநாகம் ஓர் ஆளுயுரத்திற்கு படமெடுத்து தாக்குதலில் ஈடுபடும் வல்லமைக் கொண்டது எனவும் சொல்லப்படுகிறது. அது ஒரு சீண்டலில் கக்கும் விஷம் மூலம் 20 நபர்கள் இறக்கக்கூடும் என்று அதிர்ச்சியூட்டும் தகவலையும் சொல்கிறது. 

Click for more trending news