This Article is From Feb 15, 2019

பயன்பாட்டுக்கு வந்தது இந்தியாவின் அதிவேக ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’: 10 ஃபேக்ட்ஸ்!

சென்னையில் இருகுகம் இன்டக்ரல் கோச் ஃபேக்டரியில்தான் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் 18 மாதங்களில் தயாரித்து முடிக்கப்பட்டது. 

பயன்பாட்டுக்கு வந்தது இந்தியாவின் அதிவேக ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’: 10 ஃபேக்ட்ஸ்!

இந்த ரயிலில் 16 குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றன. 1,128 பேர் இதில் பயணிக்க முடியும். 

New Delhi:

இந்தியாவின் அதிவேக ரயில் என்று சொல்லப்படும் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் இந்த துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உருவாவதற்கு பாடுபட்ட பொறியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொளிகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளாக கடின உழைப்பால் ரயில்வே துறையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றுள்ளோம்' என்று நிகழ்ச்சியின் போது கூறினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. 

10 ஃபேக்ட்ஸ்:

1.ரயில் 18 என்றழைக்கப்பட்ட இந்த ரயில், சமீபத்தில்தான் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரயில் உச்சபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தைத் தொடும். 

2.டெல்லியிலிருந்து வாரணாசிக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 9 மணி நேரம் 45 நமிடத்தில் சென்றடையும். நடுவே கான்பூர் மற்றும் அலகாபாத்தில் 40 நிமிடங்களுக்கு இந்த ரயில் நிற்கும். 

3.இந்த ரயிலில் 16 குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றன. 1,128 பேர் இதில் பயணிக்க முடியும். 

4.ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கிக் கதவு, ஜிபிஎஸ் வசதி, ஹாட்-ஸ்பாட் வசதி பொருத்தப்பட்டுள்ளன. 

5.பயோ-வாக்யூம் வகையில் ரயிலில் உள்ள அனைத்து கழிவறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

6.ஒவ்வொரு சீட்டுக்கும் பிரத்யேகமாக டூயல்-மோட் லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. 

7.ரயிலுக்கு உள்ளேயே உணவகம் ஒன்றும் இருக்கிறது. அதில் சூடான சாப்பாடு மற்றும் குளிர்பான வகைகளைப் பெறலாம்.

8.இந்த ரயிலில் பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ள பிரேக்கிஸ் சிஸ்டம் மூலம், 30 சதவிகித மின்சார சேமிப்பும் செய்ய முடியும். 

9.ஆன்லைன் மூலமாக மட்டுமே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய முடியும். சாதாரண ரயில் பெட்டி டிக்கெட்டின் விலை, 1760 ரூபாய். உயிர் ரக டிக்கெட்டின் விலை 3,310 ரூபாய்.

10.சென்னையில் இருகுகம் இன்டக்ரல் கோச் ஃபேக்டரியில்தான் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் 18 மாதங்களில் தயாரித்து முடிக்கப்பட்டது. 

.