This Article is From Jan 28, 2019

இந்தியாவின் அதிவேகமான ரயில் ''வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்''

ரூ. 97 கோடி செலவில் கடந்த 18 மாதங்களாக வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டு வந்தது.

இந்தியாவின் அதிவேகமான ரயில் ''வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்''

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் அதிவேக ரயில் உருவாக்கப்பட்டது.

New Delhi:

இந்தியாவின் அதிவேகமான ரயிலுக்கு ''வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். 

டெல்லி மற்றும் வாரணாசி இடையே இந்த ரயில் இயக்கப்படும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டராக இருக்கும். 

சுமார் 18 மாதங்களாக இந்த ரயில் சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் ரூ. 97 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வந்தது. 

ரயில் உருவாக்கம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ''ட்ரெயின் 18 என்ற இந்த ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும். முழுக்க முழுக்க இந்தியாவில் இந்திய பொறியாளர்களால் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த ரயில்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நம் நாட்டிலேயே உருவாக்கப்படும்'' என்றார். 

முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத்தில் மட்டுமே நின்று செல்லும். 

.