This Article is From Jul 02, 2020

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நகர்வு; கம்யூனிஸ்ட் கட்சி இயல்பே இது தான்: அமெரிக்கா சாடல்!

"இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை மட்டுமே உறுதிப்படுத்துகின்றன" என்று மெக்கானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நகர்வு; கம்யூனிஸ்ட் கட்சி இயல்பே இது தான்: அமெரிக்கா சாடல்!

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நகர்வு; கம்யூனிஸ்ட் கட்சி இயல்பே இது தான்: அமெரிக்கா சாடல்! (Representational)

Washington:

இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு எதிரான பெய்ஜிங்கின் ஆக்ரோஷமான நிலைப்பாடானது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை உறுதிப்படுத்துகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கோளிட்டதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார். 

மேலும் மெக்னானி கூறும்போது, கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியில், அமெரிக்கா தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அமைதி தீர்மானத்தை அது ஆதரிப்பதாகவும் கூறினார்.

கடந்த சில வாரங்களாக கிழக்கு லடாக்கில் பல இடங்களில் இந்திய மற்றும் சீனப் படைகள் கடும் மோதலில் ஈடுபட்டன. தொடர்ந்து, ஜூன் 15ம் தேதியன்று கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றம் பல மடங்கு அதிகரித்தது. சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், அது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். டிரம்பும் இதனை கூர்ந்து கவனித்து வருகிறார். மேலும், இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பும், ஆக்ரோஷமான நிலைப்பாடும், உலகின் பிற பகுதிகளுக்கும் பொருந்துகிறது.

"இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை மட்டுமே உறுதிப்படுத்துகின்றன" என்று மெக்கானி தெரிவித்துள்ளார்.

.