This Article is From Jun 01, 2019

வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்த அமெரிக்காவின் முடிவு துரதிருஷ்டவசமானது: இந்தியா

ஜிஎஸ்பி ஆனது நியமிக்கப்பட்ட பயனாளிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான தயாரிப்புகளுக்கு தடையற்ற வர்த்தக நுழைவை அனுமதிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது.

வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்த அமெரிக்காவின் முடிவு துரதிருஷ்டவசமானது: இந்தியா

ஜிஎஸ்பி என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக முன்னுரிமை திட்டமாகும்.

New Delhi:


முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, இந்திய நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்" என வர்த்தக விஷயங்களில் இந்தியா எப்போதும் தனது தேசிய நலனை உறுதிப்படுத்தி வருவதாக இந்தியா அரசு பதிலளித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்த்தை வழங்கியுள்ளது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றது.

இந்த ஜிஎஸ்பி திட்டத்தில் பெருமளவு பயனடையும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 5.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38 ஆயிரம் கோடி) அளவிலான இந்திய பொருட்களின் ஏற்றுமதி, எவ்வித வரி விதிப்பும் இன்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு ரூ. 130 கோடி அளவிலான செலவு மிச்சம் ஆகிறது.

இந்த நிலையில், அமெரிக்க வர்த்தக சட்டம் 1974ல் திருத்தும் செய்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு 45 ஆண்டுகளாக அமெரிக்கா அளித்து வந்த சலுகை முடிவுக்கு வந்திருக்கிறது. இது குறித்து கடந்த மார்ச் மாதமே இந்தியாவுக்கு அமெரிக்க எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதற்கு ஏற்றபடி இந்திய சந்தை இல்லை என்று எச்சரிக்கை விடுத்தபோது அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவுக்கு அளித்த பயனடையும் வளர்ச்சியடையும் நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்க ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூன்- 5ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இனி வரி செலுத்தாமல் எந்த பொருளையும் அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியாது. 

இந்தியா மீது இந்த நடவடிக்கை வேண்டாம் என்று வலியுறுத்தி 24 அமெரிக்க எம்.பிக்கள் கடந்த 3ம் தேதி அதிபர் ட்ரம்ப்-க்கு கடிதம் அனுப்பினர்.

.