This Article is From Jun 11, 2019

அமெரிக்காவில் மோசடி நிறுவனத்திற்கு உதவிய இந்திய மாணவர் கைது! 5 ஆண்டுகள் சிறை விதிப்பு!!

கைது செய்யப்பட்ட பிஷ்வஜீத் குமார் உள்ளிட்ட சில மாணவர்கள் இந்தியாவை சேர்ந்த ஒரே கல்லூரியில் இருந்து இன்டர்ன்ஷிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் மோசடி நிறுவனத்திற்கு உதவிய இந்திய மாணவர் கைது! 5 ஆண்டுகள் சிறை விதிப்பு!!

5 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்தபின்னர்தான் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Washington:

அமெரிக்காவில் மோசடி நிறுவனத்திற்கு உதவி செய்த இந்திய மாணவர் பிஷ்வஜீத் குமார் (21) கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறைத் தண்டனை நிறைவு பெற்ற பின்னர்தான் அவர் இந்தியாவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒரே கல்லூரியை சேர்ந்த 21 வயது மாணவர் பிஷ்வஜீத் குமார் உள்ளிட் மாணவர்கள் அமெரிக்காவில் இன்டர்ன்ஷிப்புக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே 58 - 93 வயதிக்குட்பட்டவர்களை குறி வைத்து மோசடிகள் நடந்து வந்திருக்கின்றன. அவர்களிடம் 1,180 அமெரிக்க டாலர்கள் முதல் 1,74,300 டாலர்கள் வரை நிறுவனம் ஒன்று பணம் பறித்துள்ளது. 

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமெரிக்க போலீசார் மோசடி செய்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு சிலர் உதவி செய்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய மாணவர்கள் சிலர் பின்னணியில் இருந்தது. 

இதன் அடிப்படையில் 21 வயது பிஷ்வஜித் குமார் என்ற மாணவரை போலீசார் கைது செய்தனர். மொத்தத்தில் இந்த நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிஷ்வஜீத் குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை முடிந்த பின்னர்தால் மாணவர் இந்தியாவுக்கு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.