இந்தியாவில் பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்: பன்னாட்டு நிதியம்

இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 90 அடிப்படை புள்ளிகளால் 6.1 சதவீதமாக குறைத்து பன்னாட்டு நிதியம் கணக்கிட்டிருந்தது.

இந்தியாவில் பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்: பன்னாட்டு நிதியம்

இந்தியாவில் "மிகவும் வலுவான வளர்ச்சி" ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.

Washington:

இந்தியா தனது பொருளாதாரத்தின் அடிப்படைகளில் செயல்பட்டாலும், நீண்டகால வளர்ச்சிக்கான காரணிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன, அவை கவனிக்கப்பட வேண்டும் என பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) அறிவுறுத்தியுள்ளது. 

குறிப்பாக, பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இந்தியாவில் மிகவும் திறமையான பெண்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர் என்றும் பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. 

கடந்த செவ்வாயன்று பன்னாட்டு நிதியம் உலகப் பொருளாதார அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 90 அடிப்படை புள்ளிகளால் 6.1 சதவீதமாக குறைத்து கணக்கிடப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஏழு மாதங்களில் மட்டும், மொத்தம் 120 அடிப்படை புள்ளிகள் குறைந்து, இரண்டாவது கீழ்நோக்கிய திருத்தமாக உள்ளது. 100 அடிப்படை புள்ளிகள் என்பது ஒரு சதவீத புள்ளிக்கு சமம் ஆகும்.

இதுதொடர்பாக பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தியா அதன் பொருளாதாரத்தின் அடிப்படைகளில் செயல்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவால் கவனிக்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அவை, நிதித்துறையில், குறிப்பாக வங்கி சாரா நிறுவனங்களில், வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த சில சிக்கல்களை தீர்க்க அவை உதவ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தற்போது, மிக முக்கியமானது என்னவென்றால், அதன் வளர்ச்சிக்கான நீண்டகால காரணிகளை கண்டறிந்து செயல்பட வேண்டும். மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மிகவும் திறமையான பெண்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில், இந்தியாவில் "மிகவும் வலுவான வளர்ச்சி" ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து, பன்னாட்டு நிதியம் நாட்டின் வலுவான வளர்ச்சியை கணித்து வெளிகாட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், "உலகின் மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவும் பொருளாதார மந்தநிலையை அனுபவித்து வருகிறது. ஆகவே, ஆறு சதவீதத்திற்கும் மேலானது 2019ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்க்கும் ஒன்றாகும்" என்று அவர் கூறினார்.

உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்தியாவுக்கான முன்னுரிமையாக இருக்க வேண்டும். அந்த மேம்படுத்தலை இந்தியா தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் கூறியுள்ளார்.