“என் வாயில் சிறுநீர் கழித்தனர்!”- உ.பி-யில் போலீஸாரால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் கதறல்

நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிந்தவுடன் உள்ளூர் பத்திரிகையாளர்கள் பலர் அமித் ஷர்மா இருந்த காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS

உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் ரயில் தடம்புறண்டது தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர் அமித் ஷர்மா சென்றுள்ளதாக தெரிகிறது


Shamli: 

ஹைலைட்ஸ்

  1. உ.பி ரயில்வே போலீஸார் பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்
  2. செய்தி சேகரிக்கும்போது பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்
  3. இந்த சம்பவம் தொடர்பாக 2 போலீஸார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்

உத்தர பிரதேசத்தில் பொது இடத்தில், பத்திரிகையாளர் ஒருவர், ஒரு போலீஸ் கும்பலால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து ‘அவதூறாக' கருத்து கூறியதாக குற்றம் சாட்டி பலர் கைது செய்யப்பட்டனர். அது குறித்து தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அம்மாநில போலீஸார் பத்திரிகையாளர் ஒருவரை அடித்து இழுத்துச் செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் ரயில் தடம்புறண்டது தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர் அமித் ஷர்மா சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போதுதான் மாநில ரயில்வே போலீஸார் சிலர் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இது குறித்து டிவி சேனல் நியூஸ்24-க்கு பேசிய அமித் ஷர்மா, “ரயில்வே போலீஸார், சீறுடையில் இல்லை. அவர்கள் என்னை நோக்கி வந்து சரமாரியாக தாக்கத் தொடங்கினர். செய்தி சேகரிப்பதற்காக வைத்திருந்த கேமரா கீழே விழுந்தது. அதை எடுக்கப் போகும்போது இன்னும் அதிகமாக தாக்கப்பட்டேன். நான் லாக்-அப்-ல் வைக்கப்பட்டேன். என் துணிகளை அவிழ்த்து, என் வாயில் அவர்கள் சிறுநீர் கழித்தனர்” என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியுள்ளார். 

நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிந்தவுடன் உள்ளூர் பத்திரிகையாளர்கள் பலர் அமித் ஷர்மா இருந்த காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அவர்களின் தொடர் போராட்டத்தால் ஷர்மா, இன்று காலை விடுவிக்கப்பட்டார். 
 

aid7if4o

பத்திரிகையாளர்கள் பலரும் காவல் நிலையத்தில் இருக்கும்போது ஷர்மா, “10, 15 நாட்களுக்கு முன்னர் நான் போலீஸ் குறித்து ஒரு செய்திக் கட்டுரை எழுதியிருந்தேன். என்னிடமிருந்து பிடுங்கப்பட்ட மொபைல் போனில் அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது” என்று சீற்றத்துடன் பேசுவது ஒரு வீடியோ மூலம் தெரிகிறது. 

உத்தர பிரதேச காவல் துறைக்குக் கீழ்தான் ரயில்வே போலீஸ் இயங்குகிறது. இந்த சம்பவம் குத்தி உத்தர பிரதேச காவல் துறை, “ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டு அவரை சிறையில் அடைக்கும் வீடியோ குறித்து எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரியான ஷாம்லி ராகேஷ் குமார் மற்றும் கான்ஸ்டபிள் சஞ்சய் பவார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................