This Article is From Jul 22, 2020

டெல்லி அருகே தாக்குதலுக்கு உள்ளான பத்திரிக்கையாளர் உயிரிழப்பு!

உயிரிழந்த பத்திரிக்கையாளரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல பத்திரிக்கையாளரின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு டெல்லி அரசு 10 ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. 

பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

ஹைலைட்ஸ்

  • Vikram Joshi was attacked by a group of men near his home
  • His death has triggered sharp reactions from several opposition leaders
  • The state government has announced Rs 10 lakh for the family
Ghaziabad:

டெல்லி அருகே உள்ள காஜியாபாத் பகுதியில் திங்கள்கிழமை இரவு நடுரோட்டில் பத்திரிக்கையாளர் மீது நடந்த தாக்குதலில், பத்திரிக்கையாளர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தினை சேர்ந்த விக்ரம் ஜோஷி எனும் பத்திரிக்கையாளர் திங்கட்கிழமை இரவு தனது இரு மகள்களுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். பைக்கிலிருந்து கீழே விழுந்தவுடன் அவரின் இரு மகள்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய கும்பல் பத்திரிக்கையாளரை தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இந்த சம்பவம் இரவு 10:30 மணியளவில் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தினையொட்டி இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். “ரவி மற்றும் சோட்டு ஆகிய இரு முக்கிய குற்றவாளிகள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.” என காஜியாபாத்தின் மூத்த போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  

சம்பவம் பத்திரிக்கையாளரின் வீட்டின் அருகே நடந்துள்ளதை சிசிடிவி காட்கள் தெளிவுப்படுத்தியுள்ளன.

53n5abi8

திங்கள்கிழமை இரவு பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் 

உயிரிழந்த பத்திரிக்கையாளரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல பத்திரிக்கையாளரின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு டெல்லி அரசு 10 ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. 

இந்த சம்பவத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருடைய மருமகள் ஒரு குழு தங்களை துன்புறுத்துவதாக காவல் துறையில் புகார் செய்திருந்தது. இந்நிலையில் விக்ரம் உயிரிழந்துள்ளார். காவல்துறையின் திறமையின்மைக்கு விக்ரமின் உயிர் பலி நிகழ்ந்துள்ளது என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

பத்திரிக்கையாளர் உயிரிழப்பு சம்பத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் பதிவாகியுள்ளன. “விக்ரம் ஜோஷி தனது மருமகளின் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொல்லப்பட்டார். துயரமடைந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டிவிட் செய்துள்ளார்.

உத்தரபிரதேசம் முழுவதும், கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸை விட, குற்றத்தின் வைரஸ் பரவுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்தியில் டிவிட் செய்துள்ளார்.

அதேபோல, “இன்று காலமான அச்சமற்ற பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது மருமகளை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக புகார் அளித்ததால் கொல்லப்பட்டிருக்கிறார். நாடு முழுவதும் அச்சமான சூழல் உருவாகியுள்ளது. இது ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை.” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக நேற்று, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ராவும் இந்த தாக்குதல் தொடர்பாக உ.பி. அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். “காஜியாபாத்திலேயே சட்டம் ஒழுங்கு நிலைமை இப்படி என்றால், உத்தரபிரதேசம் முழுவதும் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஒரு பத்திரிகையாளர் தனது மருமகள் துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்ததால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளருக்கே இந்நிலைமையெனில் ஒரு சாதாரண குடிமகன் எவ்வாறு பாதுகாப்பாக உணர முடியும்?” என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியிருந்தார்.

.