வட கொரியாவில் மனித உரிமை மீற‌ல்: எச்சரித்த ஐநா சபை!

வட கொரியாவில் மனிதர்கள் அமைதியாக வாழத் தகுதியற்ற சூழல் உருவாகியுள்ளது.

வட கொரியாவில் மனித உரிமை மீற‌ல்: எச்சரித்த ஐநா சபை!

அதிக அளவில் வடகொரியாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

United Nations:

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வடகொரியாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், அதிக அளவில் வடகொரியாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் ஓட்டெடுப்பு இல்லாமல் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டது. இது வடகொரியாவில் நிலவும் மோசமான சூழலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடகொரிய மக்களின் மனித உரிமை மீறல்  குறித்து நிறைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

வட கொரியாவில் மனிதர்கள் அமைதியாக வாழத் தகுதியற்ற சூழல் உருவாகியுள்ளது. பாலியல் குற்றங்கள், கொலைகள் மற்றும் சிறைச்சாலை குற்றங்கள் என கொடுமையின் உச்சத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

Newsbeep

வட கொரியாவில் மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த அமெரிக்கா முனைவதையும் ஐநா கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா ஜனவரியில் கூட்டம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2014லிருந்து அமெரிக்கா தொடர்ந்து இதற்கான உதவிகளை நட்பு நாடுகளிடம் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.