சீனாவுக்கு மெஸேஜ் அனுப்பிய வட கொரிய அதிபர் கிம்… என்ன சொன்னார்?

‘வாய்மொழி மெஸேஜ்’ என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்காத கேசிஎன்ஏ, கிம்மும் ஜின்பிங்கும் நேரடியாக பேசினார்களா என்பது குறித்தும் தெளிவுபடுத்தவில்லை. 

சீனாவுக்கு மெஸேஜ் அனுப்பிய வட கொரிய அதிபர் கிம்… என்ன சொன்னார்?

உலகிலேயே மிகவும் அதிக கட்டுப்பாடுகளும் ரகசியத்துடனும் இருந்து வரும் நாடு வட கொரியா.

ஹைலைட்ஸ்

  • அதிபர் கிம்முக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தொடர்ந்து தகவல் வந்தது
  • அவர் கிட்டத்தட்ட 3 வாரங்கள் பொது வெளியில் வராமல் இருந்தார்
  • பொதுத்தளத்தில் கிம் வராரததே வதந்திகளுக்கு வித்திட்டது
Seoul:

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு ‘வாய்மொழி மெஸேஜ்' அனுப்பியுள்ளார் என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தகவல் தெரிவித்துள்ளது. அதிபர் கிம்மின் உடல் நலம் குறித்துத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இச்செய்தியை கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது. 

‘வாய்மொழி மெஸேஜ்' என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்காத கேசிஎன்ஏ, கிம்மும் ஜின்பிங்கும் நேரடியாக பேசினார்களா என்பது குறித்தும் தெளிவுபடுத்தவில்லை. 

சீனாவில் உருவான கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸை, அந்நாடு திறம்பட கையாண்டு வெற்றி கண்டது குறித்து கிம் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்று கேசிஎன்ஏ கூறியுள்ளது. 

வட கொரியாவை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் அதிபர் கிம்மின் தாத்தாவான கிம் இல் சங். அவரின் பிறந்தநாள் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி. அந்த நாள் வடகொரியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். அப்போது அரசு சார்பில் பெரும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், இந்த முறை அப்படிப்பட்ட எந்தக் கொண்டாட்டங்களிலும் கிம் பங்கேற்கவில்லை. இதுதான், அவரின் உடல்நலம் குறித்த கேள்வியை எழுப்பியது. குறிப்பாக அவர் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. 

சில வாரங்களுக்கு முன்னர் தென் கொரியாவின் டெய்லி என்கே (Daily NK) என்னும் செய்தி இணையதளம், ‘கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இதயம் சம்பந்தமான சிகிச்சை கிம்முக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவர் அந்த சிகிச்சையிலிருந்து தேறி வருகிறார்' என்று தகவல் வெளியிட்டது. கிம்முக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வந்த தகவலை தென்கொரிய மற்றும் சீன அரசுத் தரப்புகள் உடனடியாக மறுத்தன. 

Newsbeep

கிம்மின் குடும்பத்தில் பலருக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கிம்மின் தந்தையான கிம் ஜாங் இல், 2011 ஆம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே மிகவும் அதிக கட்டுப்பாடுகளும் ரகசியத்துடனும் இருந்து வரும் நாடு வட கொரியா. அந்நாடு அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ஐ.நா சபை அந்நாட்டுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மே 2 ஆம் தேதி, வடகொரியாவில் உரத் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கிம் கலந்து கொண்டார். அப்போதுதான் அவரின் உடல்நலம் குறித்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்தன. 

சில நாட்களுக்கு முன்னர் தென் கொரியா மற்றும் வட கொரியாவின் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இது குறித்து வட கொரியா, “போருக்கு முன்னோட்டமிடுவது போல தென் கொரியா நடந்து கொள்கிறது. அது மிகப் பெரிய சேதத்தைக் கொண்டு வரும். எங்களிடமிருந்து இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்,” என்று எச்சரித்தது.