This Article is From Jun 26, 2020

நிலக்கரிக்கு மாறாக மாற்று எரிசக்தியை பயன்படுத்த வேண்டும்: இந்தியாவை சூசகமாக விமர்சித்த ஐ.நா செயலாளர்

வணிகச் சுரங்கத்தின் நிலக்கரித் தொகுதிகளுக்கான ஏலப் பணியை இந்தியா தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு ஐ.நா. பொதுச்செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரிக்கு மாறாக மாற்று எரிசக்தியை பயன்படுத்த வேண்டும்: இந்தியாவை சூசகமாக விமர்சித்த ஐ.நா செயலாளர்

அன்டோனியோ குடரெஸ் வியாழக்கிழமை COVID-19 குறித்த ஐக்கிய நாடுகளின் பதிலை தொகுத்து வழங்கியிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • உலக நாடுகள் மாசுபடுத்தாத ஆற்றலில் முதலீடுகள் செய்ய வேண்டும்: குட்டெரெஸ்
  • நிலக்கரி ஏலப் பணியை இந்தியா சமீபத்தில் தொடங்கியது
  • COVID-19 மீட்புத் திட்டங்களில் நிலக்கரியைச் சேர்க்க எந்த காரணமும் இல்லை
United Nations:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 96 லட்சத்தினை கடந்து ஒரு கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், உலக நாடுகள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறாத வகையில் மாசுபடுத்தாத ஆற்றலில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

வணிகச் சுரங்கத்தின் நிலக்கரித் தொகுதிகளுக்கான ஏலப் பணியை இந்தியா தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு ஐ.நா. பொதுச்செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் தற்போது கொரோனா தொற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். COVID-19 மீட்புத் திட்டங்களில் நிலக்கரியைச் சேர்க்க எந்த காரணமும் இல்லை. அதற்கு பதிலாக மாசுபடுத்தாத ஆற்றலில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகச் சுகாதார அமைப்பு கடந்த 3 மாதங்களக மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் தொகுத்தளித்திருந்ததை குட்டெரெஸ் நேற்று வெளியிட்டிருந்தார். “நாம் மீண்டும் பழைய வழிமுறைகளுக்கு திரும்ப இயலாது. எவையெல்லாம் நெருக்கடிக்கு காரணமோ அவற்றையெல்லாம் நாம் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. தற்போது நிலையான, அனைத்தையும் உள்ளடக்கிய, பாலின-சமத்துவமான சமூகம் மற்றும் பொருளாதார கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.“ என குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், "எடுத்துக்காட்டாக, எந்தவொரு நாடும் தங்கள் COVID-19 மீட்புத் திட்டங்களில் நிலக்கரியைச் சேர்ப்பதற்கு நல்ல காரணம் எதுவுமில்லை. மாசுபடுத்தாத, கரியமில வாயு உமிழ்வை ஏற்படுத்தாத எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு செய்வதற்கான நேரம் இது.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடெரெஸ் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், சமீபத்தில் இந்தியாதான் வணிகச் சுரங்கத்தின் நிலக்கரித் தொகுதிகளுக்கான ஏலப் பணியை தொடங்கியது. இதில் தனியாருக்கான அனுமதிக்கு பிரதமர் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வர்த்தக நிலக்கரி சுரங்கத்திற்காக 41 நிலக்கரித் தொகுதிகளுக்கான ஏலப் பணியைத் அறிவித்தார். இதன் மூலம் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் நாட்டில் ரூ .33,000 கோடி மூலதன முதலீட்டை பெற முடியும் என அரசு கணித்திருந்தது.

சர்வதேச அளவில் இந்தியா நான்காவது பெரிய உற்பத்தியாளராக இருந்தாலும், உலர் எரிபொருளை இறக்குமதி செய்யும் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க தன்னம்பிக்கை கொண்ட இந்தியா மிஷன் (ஆத்மனிர்பர் பாரத் அபியான்) கீழ் வெளியிடப்பட்ட தொடர் அறிவிப்புகளின் ஒரு பகுதியாக நிலக்கரி ஏல செயல்முறையை பிரதமர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “நிலக்கரி மீது பல உலக நாடுகள் மோகம் கொண்டுள்ளன. ஆனால், நிலக்கரி காலநிலை மாற்றத்தில் மிகப்பெரிய அளவு எதிர்மறையான பங்கு வகிக்கின்றது.“ என குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.