This Article is From Jun 29, 2018

‘அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள்!’- கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரஸைத் தாக்கும் ஜெட்லி

உடல் நலக்குறைவு காரணமாக நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகி ஓய்வில் இருக்கும் பாஜக-வின் அருண் ஜெட்லி, சூடுபிடித்து வரும் கருப்புப் பண விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ளார். 

‘அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள்!’- கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரஸைத் தாக்கும் ஜெட்லி

ஹைலைட்ஸ்

  • கருப்புப் பண விவகாரம் திடுக் தகவலை கூறினார் அமைச்சர் பியூஷ் கோயல்
  • அதை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்
  • இதையடுத்துதான், ஜெட்லி பதில் கருத்து கூறியுள்ளார்
New Delhi:

உடல் நலக்குறைவு காரணமாக நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகி ஓய்வில் இருக்கும் பாஜக-வின் அருண் ஜெட்லி, சூடுபிடித்து வரும் கருப்புப் பண விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ளார். 

ஸ்விட்சர்லாந்து நேற்று ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டது. அதில், ‘இந்தியர்களால் ஸ்விட்சர்லாந்தில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தின் அளவு 2017 ஆம் ஆண்டு, 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் மதிப்பு 1.01 ஸ்விஸ் ஃபிரான்க்ஸ் ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டது. இது இந்திய மதிப்பில் 7,000 கோடி ரூபாய் ஆகும். 

இந்நிலையில் பியூஸ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். அவர், ‘இந்தியாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, 2018 ஜனவரி 1 முதல் 2019 மார்ச் 31 ஆம் தேதி வரை, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியாவிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்தின் தரவுகள் சேமிக்கப்படும். இந்த காலகட்டத்தில் யாராவது சட்டத்துக்கு புறம்பாக டெபாசிட் செய்திருந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

இந்தியா, ஸ்விட்சர்லாந்திடம் பல மாதங்களாக கருப்புப் பணம் பதுக்கல் பற்றிய தகவல்களை கொடுக்குமாறு கேட்டு வருகிறது. இந்நிலையில், கோயலின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

கோயலின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘2014 ஆம் ஆண்டு, அனைத்து கருப்புப் பணத்தையும் எடுத்து வந்து நாட்டில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்றார். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு கருப்புப் பணப் பிரச்னையைத் தீர்க்கும் என்றார். 2018 ஆம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து இந்தியர்களின் டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறியவுடன், அவை அனைத்தும் வெள்ளைப் பணம் என்கிறார்’ என்று ட்விட்டர் மூலம் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் தனது வலைதளத்தில் அருண் ஜெட்லி, ‘ஸ்விட்ரசர்லாந்து நாட்டில் இருக்கும் வங்கிகளில் உள்ள அனைத்துப் பணமும் கருப்புப் பணம் என்று நினைப்பது மிகத் தவறு. அப்படிப்பட்ட நிலை பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. இப்போதெல்லாம் கருப்புப் பணத்தை அவ்வளவு சுலபமாக வைத்திருக்க முடியாது. வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து விடலாம் என்றிருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி இருந்த நடைமுறையை மாற்ற அந்நாடு பல சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் குடிமகன்களாக இருந்து, பின்னர் இன்னொரு நாட்டின் குடிமகனாக ஆன பின்னர் செய்யும் டெபாசிட் குறித்தும், என்.ஆர்.ஐ குடியுரிமை பெற்ற இந்தியர்கள் செய்யும் டெபாசிட் குறித்தும் விசாரிக்க நம் நாட்டில் சட்டங்கள் இல்லை. மேலும், இந்தியாவில் குடிமகன்களாக இருப்பவர்கள் சட்டபூர்வமாகவும் டெபாசிட் செய்து வருகின்றார்கள். அதே நேரத்தில், சட்டத்துக்கு புறம்பாக டெபாசிட் செய்திருந்தால், அது குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த விஷயம் பற்றிய அடிப்படையை புரிந்து கொண்டு கருத்து கூற வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

.