கொரோனா முன்னெச்சரிக்கை: அயோத்தி பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன்; உமா பாரதி

அயோத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை: அயோத்தி பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன்; உமா பாரதி

கொரோனா முன்னெச்சரிக்கை: அயோத்தி பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன்; உமா பாரதி

New Delhi:

கொரோனா வைரஸ் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன் என முன்னாள் பாஜக தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக உமா பாரதி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற உயர்மட்ட தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அயோத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லிக்கு அருகில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அயோத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்து கவலை எழுந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி குறித்து கவலை எழுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் கூறும்போது, போபாலில் இருந்து ரயில் மூலம் அவர் உத்தர பிரதேசம் பயணிக்க உள்ளதாகவும், அங்கு பிரதமர் நரேந்திர மோடியையும், "ஆயிரக்கணக்கானவர்களையும் கோவிலுக்குள் பாதுகாக்க அயோத்தி பூமி பூஜையில் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பூமி பூஜை நடக்கும் சமயத்தில், அவர் வேறு இடத்தில் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நான் இன்று மாலை போபாலில் இருந்து புறப்படுகிறேன். நாளை மாலை அயோத்தி சென்றடைவேன். இடையில், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம். 

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் இடத்தில் இருந்து நான் விலகியிருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்ற பின்னர், நான் அங்கு செல்வேன் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து ராமர் கோயில் பூமி பூஜை பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் தான் தகவல் தெரிவித்துவிட்டதாகவும், விருந்தினர்கள் பெயரில் தனது பெயர் விலக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.