This Article is From Sep 21, 2019

இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க ‘நாள் குறித்த’ அமெரிக்க அதிபர் Trump!

செவ்வாய் கிழமையன்று, ஐ.நா சபைக் கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவாராம்

இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க ‘நாள் குறித்த’ அமெரிக்க அதிபர் Trump!

இது குறித்து அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

ஹைலைட்ஸ்

  • "Howdy, Modi" நிகழ்ச்சியில் மோடியுடன் பங்கேற்பார் ட்ரம்ப்
  • "Howdy, Modi" நிகழ்ச்சியில் 50,000 கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பு
  • இதைத் தவிர மோடி - டரம்ப், தனியாகவும் சந்தித்துப் பேச உள்ளனர்
Washington:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, வரும் திங்கட்கிழமை சந்தித்துப் பேசுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை, டெக்சாஸில் நடக்கும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியை மீண்டும் செவ்வாய் கிழமை சந்தித்து உரையாடுவார் என்று தெரிகிறது.

ஐ.நா சபையின் பொதுக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களையும் ட்ரம்ப் பார்க்க உள்ளார். 

டெக்சாஸின் ஹூஸ்டனில் நடக்கும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் சுமார் 50,000 பேருக்கு மத்தியில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் உரையாற்றுவார்கள். அதைத் தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க் நகரத்துக்கு வருவார் என்று கூறப்படுகிறது. பின்னர் அவர் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணாத்துக்கு பயணம் செய்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

“திங்கட்கிழமை காலையில், உலக அளவில் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நோக்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிபர் ட்ரம்ப் பேசுவார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பார். பின்னர் பல நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளார்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். 

செவ்வாய் கிழமையன்று, ஐ.நா சபைக் கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவாராம். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போதும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது, ராணுவத் துறை மற்றும் மின்சாரத் துறையில் ஒப்பந்தங்கள் போடுவது, இரு நாட்டு வர்த்தகத்திலும் உள்ள சுணக்கங்களைப் போக்குவது, மற்றும் உலக அளவில் இருக்கும் பிரச்னைகளை எப்படி சேர்ந்து எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.