மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை

ஆளுங்கட்சியை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை

Yesterday, a Trinamool leader, the driver of the vehicle and another were killed in Joynagar (File)

Kolkata:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாய் நகரில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹமித் அன்சாரி என்ற அவர் அத்ரா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ரயில்வே கிராசிங்கில் காத்திருந்த அவரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் மிக அருகில் வந்து சுடத் தொடங்கினர். இதில் அன்சாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் உடல் மீது 11 குண்டுகள் பாய்ந்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளர். மோப்ப நாயின் உதவியுடன் கொலைகாரர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது புரியுளா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.