மரங்கள் அழித்தது தொடர்பான தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
New Delhi: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1.09 கோடி மரங்களை அழிப்பதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரங்களை அழித்தது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பாபுல் சுப்ரியே மக்களவையில் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது -
வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த 2014-19 களில் மொத்தம் 1.09 கோடி மரங்களை அழிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதிகபட்சமாக கடந்த 2018-19-ல் 26.91 லட்சம் மரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தவிர்த்து காட்டுத் தீயால் அழிந்த மரங்கள் குறித்த விவரங்கள் வனத்துறையிடம் இல்லை.
இதேபோன்று மரங்களை வளர்ப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 12 மாநிலங்களுக்கு பசுமை இந்தியா திட்டத்தின் சார்பாக மொத்தம் 237.07 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அளித்த பதிலில் தெரிவித்துள்ளது. பாஜகவின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், 'கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான மரங்களை பாஜக அழித்துள்ளது. அக்கட்சி எதிர்காலத்தை அளிக்கிறது. மரங்கள்தான் நம் உயிர். மரங்கள்தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. சுற்றுச் சூழலை பாதுகாப்பதும் ரங்கள்தான்' என்று கூறியுள்ளார்.