This Article is From Jan 04, 2020

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: என்ன சொல்கிறார் TTV தினகரன்..?

TN Local body elections: 'தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு...'

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: என்ன சொல்கிறார் TTV தினகரன்..?

TN local body elections: 'பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தளராது போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கும், அவர்களது வெற்றிக்காக இரவு-பகல் பாராது உழைத்த கழக நிர்வாகிகளுக்கும்...'

TN Local body elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. 

முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.  இந்த வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கியது  உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 9 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 59.42 சதவீதம் வாக்கு பதிவானது. மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் திமுக கூட்டணியே இதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியும் கணிசமான இடங்களைப் பிடித்தது. அதே நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான வெற்றியைப் பெற்றது. குறிப்பாக ஊரக ஒன்றிய கவுன்சில் தேர்தலில், அமமுக, 95 இடங்களில் வென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியினைக் காணிக்கையாக்குகிறேன்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தளராது போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கும், அவர்களது வெற்றிக்காக இரவு-பகல் பாராது உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.

.