This Article is From Dec 18, 2018

தமிழக மீனவர்களுக்கு இஸ்ரோவின் நவீன கருவிகள் வழங்கப்பட்டன

வானிலை அறிவிப்புகளை சரியான நேரத்தில் பெறுவதற்கு ஏதுவாக மீனவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட இஸ்ரோ கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களுக்கு இஸ்ரோவின் நவீன கருவிகள் வழங்கப்பட்டன

கடந்த ஆண்டு தாக்கிய ஒக்கி புயலில் சிக்கி மீனவர்கள் சிலர் காணாமல் போனார்கள்

Chennai:

இஸ்ரோ நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட 200 வானிலை அறிவிப்பு கருவிகள் 80 மீனவர் குழுக்களிடம் இன்று வழங்கப்பட்டன. இதன் மூலம் வானிலை அறிவிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு,பேரிடர் சிக்கல்களை அவர்களால் தடுக்க முடியும்.

சென்னை, நாகப்பட்டினம், கன்னியா குமரியை சேர்ந்த மீனவர்கள் 7 பேருக்கு இந்த கருவிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். கடந்த ஆண்டு தாக்கிய ஒக்கி புயலில் சிக்கி மீனவர்கள் சிலர் காணாமல் போனார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு நவீன கருவிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து மீனவர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்படும் என்று நடப்பாண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், மீனவர்களுக்கு இன்று கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கருவிகளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்திருக்கிறது.
 

.