This Article is From Jan 28, 2020

5, 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு: அரசு திட்டவட்டம்!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி, அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும்.

5, 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு: அரசு திட்டவட்டம்!

5, 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு: அரசு திட்டவட்டம்!

நடப்பாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முறையால், உளவியல் ரீதியான பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, அனைத்து  அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை சரளமாக ஆங்கிலம் பேச, ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் வாரம் 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

விடுமுறை நாட்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு தமிழ் பயிற்சி, மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி, அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும். நடப்பாண்டு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது என்பது அவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல். இந்த நடவடிக்கை என்பது பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும், மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதை தடுத்துவிடும். 

அதனால், தமிழக அரசு இந்த புதிய நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், எதையும் பொருட்படுத்தாத தமிழக அரசு தான் எடுத்த முடிவில் திட்டவட்டமாக இருந்து வருகிறது. 

.