This Article is From Jan 23, 2019

அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது: டிடிவி தினகரன்

அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது: டிடிவி தினகரன்

முன்னதாக, நேற்று புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்த போது, எதிர்க்கட்சி கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளதால், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் இணைய வேண்டும். ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும். இது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம், முதல்வர் பழனிசாமி சொல்லிதான் அவர் பேசி வருகிறார். அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது. அது போல் பாஜகவுடன் கூட்டணி சேரவும் மாட்டோம்.

ராம்தாஸ் அத்வாலே போன்றவர்கள் தங்கள் விருப்பத்தை சொல்கிறார்கள். அவர்கள் நினைப்பதெல்லாம் ஒரு போதும் நடக்காது என்று அவர் கூறியுள்ளார்..


 

.