This Article is From May 06, 2019

பாப்கார்ன் விற்பவர் உருவாக்கிய விமானம்

நேஷனல் ஜியோகிராபிக் சேனலி வெளிவந்த ஏர் க்ராஸ் இண்வெஸ்டிகேஷன் என்ற தொடரைப் பார்த்து காற்றின் அழுத்தம், வேகம் ஆகியவற்றை கற்றுக் கொண்டதாக தெரிவிக்கிறார்.

பாப்கார்ன் விற்பவர் உருவாக்கிய விமானம்

தனக்கு இருந்த சிறிய நிலத்தை ரூ. 50,000க்கு விற்று ஒரு என் ஜி ஓவில் சிறிய அளவில் கடனும் பெற்று உருவாக்கியுள்ளார்.

Tabur, Pakistan:

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமது ஃபயாஸ் பாப்கார்ன் விற்பது, செக்யூரிட்டி வேலைகளை செய்து வருகிறார். இவர் ரிக்‌ஷா மற்றும் இதர பொருட்களை வைத்து விமானம் ஒன்றை வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

தொலைக்காட்சியிலும், இணையத்திலுள்ள புளூ பிரிண்ட்களைப் பார்த்தும் இந்தம் விமானத்தை முகமது ஃபயாஸ் உருவாக்கியுள்ளார். 

38a01mp

ஃபயாஸின் கண்டுபிடிப்பை பாராட்டி பாகிஸ்தான் விமானப்படையினர் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.  வறுமையினால் படிக்க முடியாத நிலையில் தன்னுடைய வாய்ப்புகளுக்காக மிகவும் போராடியுள்ளார். தான் உருவாக்கிய விமானத்தில் பறந்து சோதனை செய்த முகமது ஃபயாஸ் காற்றில் பறந்தேன்.. அதைத் தவிர வேறு எதையும் உணரவில்லை என்று தெரிவித்தார். 

இவரின் கண்டிபிடிப்பை அருகில் உள்ள கிராமத்தினர் பலரும் பார்வையிட வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

nf4mddd

முகமது ஃபாயஸின் கனவு

 32 வயதான முகமது ஃபயாஸ் விமானப் படையில் சேர மிகவும் விரும்பியுள்ளார். ஆனால் பள்ளிப் பருவத்திலே அப்பா இறந்து விட்டதால் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டார். கிடைத்த வேலைகளை பார்த்து தாயையும் 5 உடன் பிறந்த சகோதரர்களையும் காப்பாற்றி வந்துள்ளார்.

பொறுப்புகளுக்கு மத்தியில் பணத்தினை சேமித்து விமானத்தை செய்துள்ளார். நேஷனல் ஜியோகிராபிக் சேனலி வெளிவந்த ஏர் க்ராஸ் இண்வெஸ்டிகேஷன் என்ற தொடரைப் பார்த்து காற்றின் அழுத்தம், வேகம் ஆகியவற்றை  கற்றுக் கொண்டதாக தெரிவிக்கிறார். 

தனக்கு இருந்த சிறிய நிலத்தை ரூ. 50,000க்கு விற்று ஒரு என் ஜி ஓவில் சிறிய அளவில் கடனும் பெற்று உருவாக்கியுள்ளார். கடனுக்கான் வட்டியை இன்றளவும் கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.