ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உயிரிழப்பு!
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் போலீசாரின் கான்வாய் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நவுகாம் பைபாஸ் அருகே போலீஸ் குழுவினர் மீது தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். அதில், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நவுகாம் பைபாஸ் அருகே இருந்த போலீஸ் குழுவினர் மீது, பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் காயமடைந்த 3 போலீசாரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேலும் தகவல்கள் தெரிவிக்கப்படும்
#Terrorists fired #indiscriminately upon police party near #Nowgam Bypass. 03 police personnel injured. They were shifted to hospital for treatment where 02 among them attained #martyrdom. Area cordoned off. Further details shall follow. @JmuKmrPolice
- Kashmir Zone Police (@KashmirPolice) August 14, 2020
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து, சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க, காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
With inputs from PTI