ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! ஒருவர் சரண்!!

ஷோபியான் கிராமத்தில் ஐந்து பயங்கரவாதிகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடங்கியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! ஒருவர் சரண்!!

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்

Srinagar:

ஜம்மு காஷ்மீர் பகுதியின் ஷோபியன் மாவட்டத்திலுள்ள கிலூரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த சில குறிப்பிடத்தக்க துப்பாக்கி சண்டையில் இதுவும் ஒன்று என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறந்த பயங்கரவாதிகளில் இருவர் பாஜகவுடன் இணைந்த ஒரு பஞ்சாயத்து உறுப்பினரைக் கடத்தி கொலை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

பஞ்சாயத்து உறுப்பினரான நிசார் அகமது பட் சடலம் ஆப்பிள் பழத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த சண்டை தொடங்கியுள்ளது. முன்னதாக அவர் 10 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தார்.

“பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றோம். பஞ்சாயத்து உறுப்பினர் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே என்கவுண்டர் நடந்தது" என்று காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறியுள்ளார்.

ஷோபியான் கிராமத்தில் ஐந்து பயங்கரவாதிகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடங்கியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை தொடங்கின. அடுத்தடுத்த துப்பாக்கிச் சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும்,

ஒரு பயங்கரவாதி சரணடைந்தார், நாங்கள் அவரைக் காவலில் எடுத்துள்ளோம், அவர் சட்டப்படி விசாரிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.