This Article is From Jul 03, 2020

சிஆர்பிஎப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

கடந்த வாரம் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

சிஆர்பிஎப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

சிஆர்பிஎப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Srinagar:

ஐம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் அருகே கடந்த வாரம் சிஆர்பிஎப் வீரர் மற்றும் 6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி ஸ்ரீநகர் அருகே நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று சாகித் தாஸ் என்ற அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த போதிலும், தப்பிச்சென்றுள்ளார். 

சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் நேற்று இரவு ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, எல்லைக்கோட்டு பகுதியில் பணியில் இருந்த ஒரு சிஆர்பிஎப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சிஆர்பிஎப் வீரர் மற்றும் 6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சாகித் தாஸ் ஸ்ரீநகரில் நேற்றிரவு என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். நிஹான் என்ற அந்த சிறுவன் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், கார் கண்ணாடிகளை துளைத்து சிறுவன் மீது குண்டுகள் பாய்ந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒரு வீரர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து, பயங்கரவாதி சாகித் தாஸின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்கிழமையன்று தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் 3 பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் மட்டும் தப்பிசென்றார். பின்னர். தப்பிய அந்த 3வது பயங்கரவாதி சாகித் தாஸ் என்று தெரியவந்தது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், வெவ்வேறு என்கவுண்டரில் 48 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

முன்னதாக, கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீர் தலைமை காவலர் தில்பாக் சிங் கூறும்போது, இந்த வருடத்தில் மட்டும் நூற்றுக்கும் மேலான பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த ஐந்தரை மாதங்களில் மட்டும். இதில், 50க்கும் மேற்பட்டோர் ஹிஸ்புல் முகைதின் அமைப்பை சேர்ந்தவர்கள், 20 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள், 20 பேர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் அல்-பாதர், அன்சார் காஸ்வாத்புல் போன்ற சிறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று கூறியிருந்தார். 

.