This Article is From Aug 28, 2018

சகோதரியை கொன்ற 17வயது சிறுவன்; மகாராஷ்டிராவில் பரபரப்பு

ஆண் நண்பர்களுடன் நட்பு கொண்டிருந்த சகோதரியை, 17வயது சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சகோதரியை கொன்ற 17வயது சிறுவன்; மகாராஷ்டிராவில் பரபரப்பு
Palghar:

மகாராஷ்டிரா: ஆண் நண்பர்களுடன் நட்பு கொண்டிருந்த சகோதரியை, 17வயது சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பர்களுடன் பழகுவதை விரும்பாததால், அக்கா-தம்பி இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சகோதரியின் கழுத்தை நெறித்த சிறுவன், அவரை கொலை செய்துள்ளான் என்று காவல் துறை அதிகாரி ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

.